உச்சிக்கண்

“தென்னாடும் வடநாடும் கண்ணிடை நடுநாடும் கீழ்மூலநாடும் அறிவமுத நாடும், கூடிக்குலாவும் நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே. தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம் விட்டெ விட்டேன் பின் ஒன்றைத் தொட்டேன் அதை விடமுடியா மேல்நிலை சென்றேன் அது எது? அதுவே என்னிலை உணர்வு.” தலைக்குமேல் நடு மண்டை ஓட்டிற்குள்ளே அமைந்துள்ள இடமே உச்சிக்கண். நெற்றிக்கண் வழியாய் […]

பிடரிக்கண்

பின் மூளையின் நடு இடமே பிடரிக்கண். இந்த இடத்தில் முதுகெலும்பின் உள் வழியாய் நெற்றிக்குக் கருவாகிய விந்து எனும் குண்டலினி வரும்போது இந்த இடத்தை உராய்ந்து கொண்டு வருவதால், அங்கு ஏற்படும் வெப்பத்திற்குச் சோமவட்டம் என்று பெயர். இப்பின் மூளையில்தான் நாம் கேட்டதும், பார்த்ததும், நினைத்ததும், நுகர்ந்ததுமான எல்லாப்பதிவுகளும், அணுக்களாகப் பதிந்து இருக்கின்றன.

நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் […]

மூலக்கண்

முதுகுத்தண்டிற்குக் கீழ் சிறுநீர்த் துவாத்திற்கும் மலத்துவாரத்திற்கும் இடையில் “மூலக்கண்” உள்ளது. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதைப் பலவிதமாகச் சொல்லலாம். இதில் அடங்கியிருக்கும் கருவின் நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையில் ஒத்து இருக்கிறது. இதை மேல் நோக்கிக் கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.

குண்டலினியோகம்

குண்டலினி என்றால் என்ன? தாவரங்கள் வெளிச்சக்தி, ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக வந்து முடிவாகிறது. அது போல் எல்லா ஜீவராசிகளும் அனேகவித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனித உடம்பில் 13, 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்த நாடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கிறது. விந்துவின் உள்ளும், […]