பரஞ்சோதி நெற்றிக்கண் தியானத்திற்கு வரவேற்கிறோம்

நெற்றிக்கண்ணை எழுப்புங்கள் எங்கிருந்தும் தீட்சை பெறலாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் நெற்றிக்கண் தியான தீட்சையை பரஞ்சோதி கோவிந்த் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

உச்சிக்கண்

“தென்னாடும் வடநாடும் கண்ணிடை நடுநாடும் கீழ்மூலநாடும் அறிவமுத நாடும், கூடிக்குலாவும் நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே. தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம் விட்டெ விட்டேன் பின் ஒன்றைத் தொட்டேன் அதை விடமுடியா மேல்நிலை சென்றேன் அது எது? அதுவே என்னிலை உணர்வு.” தலைக்குமேல் நடு மண்டை ஓட்டிற்குள்ளே அமைந்துள்ள இடமே உச்சிக்கண். நெற்றிக்கண் வழியாய் […]

பிடரிக்கண்

பின் மூளையின் நடு இடமே பிடரிக்கண். இந்த இடத்தில் முதுகெலும்பின் உள் வழியாய் நெற்றிக்குக் கருவாகிய விந்து எனும் குண்டலினி வரும்போது இந்த இடத்தை உராய்ந்து கொண்டு வருவதால், அங்கு ஏற்படும் வெப்பத்திற்குச் சோமவட்டம் என்று பெயர். இப்பின் மூளையில்தான் நாம் கேட்டதும், பார்த்ததும், நினைத்ததும், நுகர்ந்ததுமான எல்லாப்பதிவுகளும், அணுக்களாகப் பதிந்து இருக்கின்றன.

நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் […]

மூலக்கண்

முதுகுத்தண்டிற்குக் கீழ் சிறுநீர்த் துவாத்திற்கும் மலத்துவாரத்திற்கும் இடையில் “மூலக்கண்” உள்ளது. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதைப் பலவிதமாகச் சொல்லலாம். இதில் அடங்கியிருக்கும் கருவின் நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையில் ஒத்து இருக்கிறது. இதை மேல் நோக்கிக் கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.

குண்டலினியோகம்

குண்டலினி என்றால் என்ன? தாவரங்கள் வெளிச்சக்தி, ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக வந்து முடிவாகிறது. அது போல் எல்லா ஜீவராசிகளும் அனேகவித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனித உடம்பில் 13, 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்த நாடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கிறது. விந்துவின் உள்ளும், […]

பொன்மொழிகள்

ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன் உயர்ஞானத்தால் தன்னை அறிவான். புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள். துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டுவிடாதீர்கள். ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட அரைநிமிட ஆராய்ச்சியே மேல். அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது. பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவடும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்! பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் […]

கடவுளாயுள்ள உலகத்தத்துவம்

எங்கும் பூரணமான இருட்டில் சூனியத்தில் ஒன்றுமில்லாது ஓர் அணுவாயிருந்த கடவுள் என்ற அனாதியாயுள்ள ஆதி, நான் என்ற துணிகரமாகி வியாபகத்தில் நினைப்பாகி வேகத்தில் சப்தமாகி, உருவத்தில் நெருப்பாகி என்றென்றைக்கும் குறைந்திடாப் பெருக்கம் கொண்ட அந்நெருப்பின் பொறிகளே அணுக்களாகி எங்கும் நிறைந்த இருட்டில் அவ்வணுக்களே வேகமாக பரவி அவ்வேகங்குறைந்ததும், ஆங்காங்கு அவவணுக்களின் இயல்பால் ஒன்றுசேர்ந்து அச்சேர்க்கையால் சுழலுதல், […]

பரஞ்சோதி மகான் அவர்களின் தோற்றமும் வாழ்க்கையும்

நமது (ஜெகத் மகாகுரு, தத்துவ தவஞானி, ஞானவள்ளல்) பரஞ்சோதி மகான் அவர்கள், இந்திய நாட்டின் தென்பகுதியில் “காண்ஸாபுரம்” என்ற ஊரில் 2-5-1900ஆம் ஆண்டு இரவு 8.30 மணியளவில் பிறந்தார்கள். இந்த புனித நன்னாளை நாம் ஜெனன விழாவாக கொண்டாடி வருகிறோம். ஞான உதயம் தாம் வசித்து வந்த ஊரில் 11.11.1911ஆம் தேதி பகல் 11மணிக்கு மேலை […]